#JUST IN : தமிழ்நாட்டில் தேர்தல் தேதி முழு விவரம்!
Mar 15, 2026, 16:52 IST
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதியைசற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார்.
அதன்படி வரும் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரும் ஏப்.6, வேட்புமனு பரிசீலனை ஏப்.7ம் தேதி, வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஏப்.9ம் தேதி, வாக்குப்பதிவு ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.