×

#JUST IN : தொகுதி மாறி போட்டியிடும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்..! 

 

23 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார். வேப்பனஹள்ளி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடவுள்ளனர்.

அதாவது கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சி.வி.சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதே போல், கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்த முறை சிவகாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்