#JUST IN : த.வெ.க ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் எல்லாமே நாசம் - மு.க.ஸ்டாலின்..!!
திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது;
ஏராளமான கல்லூரிகள், பல்கலைகளை உருவாக்கி, கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி. படிப்பு முடித்த திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் நிறுவனங்களை நாம் கொண்டு வந்தோம்.
இதன் பலனாக தமிழகம் எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்ந்தது. இந்தப் பயணத்திற்கு நாம் எதிர்கொண்ட தடைகளை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஏனெனில், கடந்து வந்த பாதையை புரியாத இந்த தலைமுறையினருக்கு தெரியவில்லை. எனக்கு இருக்கும் வருத்தம் எல்லாம், இத்தனை ஆண்டுகள் நாம் பாடுபட்டு உருவாக்கி இவ்வளவு வளர்ச்சியும், இந்த 6 மாதத்தில் பின்னோக்கி செல்கிறது.
ஒரு விஷயத்தில்கூட அவர்களால் (தவெக) உறுதியாக இருக்க முடியவில்லை. ஒரு விஷயத்தை அறிவிக்கிறார்கள், அவர்களே ரத்து பண்றாங்க. எல்லா விஷயத்திலும் 'யூ-டர்ன்' தான். இவர்களே செய்திகளை கசிய விடுகிறார்கள். அதுக்கு எதிர்ப்பு கிளம்பினால், இவர்களே உண்மை இல்லை என்று மறுக்கிறார்கள். பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை காமெடியன்களாக பார்க்கிறார்கள்.
எந்தத்துறையை எடுத்துக் கொண்டாலும், தமிழகம் பின்னோக்கித் தான் செல்கிறது. இந்த ஆட்சியில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டி. அதுக்கப்புறம், போதைப்பொருளுக்கும், வன்கொடுமைக்கும் தான் போட்டி.
இப்போது, அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பதில், அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களும் தான் போட்டி. அடுத்து என்ன வரும் என்று தெரியவில்லை. 6 மாசம், எல்லாமே நாசம் என்பதைப் போலத் தான் தவெக ஆட்சி நடக்கிறது. தவெக கட்சி அரசியல் பிணி மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பிணி. மக்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.