☰
×

#JUST IN : திமுகவினர் ஷாக்..!  இடைத் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது..! 

 

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது..திமுக வேட்பாளர் சேதுசெல்வம் வெறும் 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்..

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது திமுக; டெபாசிட் பெற 3,632 வாக்குகள் தேவை என்ற நிலையில், 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று திமுக டெபாசிட் இழந்தது

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,358 (61.12%) ஆகும். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 80.81 சதவிகிதம் ஆகும்.

இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4876 வாக்குகளும் (22.31%), மூன்றாமிடம் பிடித்த திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளும் (12.19%), நான்காமிடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளும் (1.42%) பெற்றனர்.

பொதுவாக, மொத்தம் பதிவாகிற வாக்குகளில் 6இல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் தான் வேட்பாளர்கள் டெபாசிட் பெறமுடியும். ஆனால், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 21,756 வாக்குகள் பதிவாக நிலையில், டெபாசிட் பெற 3632 வாக்குகள் தேவை. அதன்படில் இந்த முறை திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட 9 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.