☰
×

#JUST IN : சத்யபாமாவை தகுதி நீக்கம் செய்க : ஆதாரங்களுடன் புகார் அளித்த திமுக MLA ஆஸ்டின்..!

"தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்த திமுக MLA ஆஸ்டின்...

சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா பேசியதாக வீடியோ பரவுகிறது. அதில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கும், ரூம் புக் செய்யவும் பல லட்சம் செலவு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தேர்தலில் ₹31 கோடி செலவு செய்ததாக சத்தியபாமாவின் வீடியோ வைரலாகும் நிலையில், அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ECI-ல் திமுக MLA ஆஸ்டின் புகாரளித்துள்ளார். வீடியோவில் இருப்பது அவர்தான் என்பது உறுதியானால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதோடு, 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

வீடியோவில் பேசியது நான் தான் என்றும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியாயப்படி பார்த்தால் அதற்காக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

#WATCH | "தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்த திமுக MLA ஆஸ்டின் #SunNews | #Sathiyabama | #Dharapuram | #TVK | #DMK https://t.co/sTMGlrOuq8

— Sun News (@sunnewstamil) October 6, 2026

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்ததாக கூறும் வகையில் வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு விளக்கம் அளித்து கூறுகையில், “நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. இந்தக் காணொலியை பரப்பியது யார் என்று தெரியவில்லை. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள்.

இந்த வீடியோ தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர். இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும். தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.