#JUST IN : திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட அறிவிப்பு குறித்து விவாதிக்க அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசுவதற்கு திமுக அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இத்தலைப்பில் விவாதிக்க சபாநாயகர் அனுமதியளிக்காததால் திமுகவினர் கூச்சலிட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே வெளிநடப்பு செய்யாமல் தனது தொகுதிப் பிரச்னை குறித்து தொடர்ந்து பேசிய ஒரேயொரு திமுக உறுப்பினருக்கு சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
#WATCH | பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது குறித்துப் பேச எதிர்க்கட்சி திமுகவுக்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர்.. திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!#SunNews | #Parandur | #DMK | #TNAssembly pic.twitter.com/XHhzFrjAVB
— Sun News (@sunnewstamil) August 24, 2026