☰
×

#JUST IN : தி.மு.க. ஆட்சியை விடக் குறைவான விலையில் சைக்கிள் கொள்முதல்..!

 

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு மாணவர்களுக்கு தலைக்கவசம், தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி போன்றவற்றுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது.. இந்த திட்டத்தை செயல்படுத்த 277 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கோரப்பட்டது. பிறகு 5 லட்சத்து 32,388 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவதற்கான டெண்டர் ஹீரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

முதலில் மாணவர் ஒருவருக்கு வரிகள் உட்பட 7,235 ரூபாயிலும், மாணவி ஒருவருக்கு வரிகள் உட்பட 7476 ரூபாயிலும் சைக்கிள்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. பிறகு கொள்முதல் விலையை குறைக்க, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 9 கட்டப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் விலையைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. மாணவர்களுக்கான சைக்கிள் ரூ. 5,260 என்ற விலையிலும், மாணவிகளுக்கான சைக்கிள் ரூ. 5,130 என்ற விலையிலும் வழங்க ஹீரோ நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 5 மாதத்தில் சைக்கிள் வழங்கப்படும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்தது.

கடந்த தி.மு.க ஆட்சியுடன் ஒப்பிடுகையில் த.வெ.க ஆட்சியில் குறைவான விலைக்கு சைக்கிள் கொள்முதல்.. ஆண்கள் சைக்கிளுக்கு ரூ.6, பெண்கள் சைக்கிள் ரூ.4.70 விலை குறைவு..

#JustNow || 10 ஆண்டுகள் என்ற நீண்டகால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக மின்சார வாரியம் முடிவு.. #EB | #Electricity | #TNGovt | #PolimerNews https://t.co/yu5jcyFL2W

— Polimer News (@polimernews) November 13, 2026