×

#JUST IN : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உத்தேச தொகுதிகள் வெளியீடு..!

 

திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 6 தொகுதிகள் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனைத்தொடர்ந்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக வழங்க முன்வந்த 5 தொகுதிகளை ஏற்க அக்கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்தது.

இந்நிலையில் தற்போது 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

கீழ்வேளூர், 
கந்தர்வகோட்டை, 
பழனி, 
திருவொற்றியூர், 
விளவங்கோட்டு தொகுதிகளில் சிபிஎம்க்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற கீழ்வேளூர், கந்தர்வகோட்டை, தொகுதி மீண்டும் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.