☰
×

#JUST IN : அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கி கணக்கை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

நூல்கள் கொள்முதல் விவகாரத்தில் கோவை ஈவெரா அறிவுலகத்தில் 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். குறிப்பிட்ட அந்த தமிழ் நூல்கள் வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குச் சென்று ஆய்வும் மேற்கொண்டனர்.

விசாரணை ஆய்வு என போலீசார் விசாரணையை வேகப்படுத்தி இருக்கும் சூழலில், பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதை முறைப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தவில்லை என்று கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத உயர் கல்வித்துறை செயலாளர் கோபால், பொது நூலக இயக்குனர் சஜ்ஜீவனா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கில் கேட்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் மேலும் கூறி இருப்பதாவது; கோவை ஈவெரா அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யாவிடில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? அகல் விளக்கு பதிப்பகத்தின் வங்கி கணக்கை முடக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.