×

#JUST IN : காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா..!

 

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 16 இடங்களில் காங்., போட்டியிட்டு, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட மாநில தலைவர் வைத்திலிங்கம் டெபாசிட் இழந்தார்.


இந்நிலையில் காங்., தோல்விக்கு காரணமான வைத்திலிங்கம், தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி அக்கட்சியின் ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் தலைமை அலுவலகம் எதிரே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்., தலைவர் பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில்  சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தலைவர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார்.