×

#JUST IN : கோவை மாணவர் கொலை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

 

"மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த அமுதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமுதன் கொலை வழக்கு - போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை
 
கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது. இரு குழுக்கள் இடையேயான மோதலில் மாணவர் அமுதன் கொலை. போதைப் பொருள் தொடர்பான வழக்கு அல்ல.
 
உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. மாணவர் அமுதன் கொலை - 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை"   - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் 

"போதைப் பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரியவந்துள்ளது".இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு இடையிலான மோதலில் தாக்கியுள்ளனர்.கல்லூரி மாணவன் அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.