#JUST IN : கூடியது சட்டப் பேரவை : எம்எல்ஏவாக பதவியேற்றார் முதல்வர் விஜய்..!!
தமிழ்நாட்டில் 233 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இன்று பதவியேற்கின்றனர்.
17-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் முதலாவதாக சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அப்போது அவர் உளமாற உறுதி கூறுகிறேன் என கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து தியாகராய நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் என். ஆனந்த் பதவியேற்றார்.
தொடர்ந்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா(வில்லிவாக்கம்), அருண்ராஜ் (திருச்செங்கோடு), செங்கோட்டையன் (கோபிச்செட்டிபாளையம்), வெங்கடரமணன் (மயிலாப்பூர்), நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்), ராஜ்மோகன் (எழும்பூர்), பிரபு (காரைக்குடி) மற்றும் கிருத்திகா (சிவகாசி) ஆகியோரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு ஆகியோர் கடவுள் அறிய என கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.