#JUST IN : ஆபிரஹாம் லிங்கன் உரையை குறிப்பிட்ட முதல்வர் விஜய்..!
தமிழ்நாட்டின் முதலமைச்சாராக பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் முதல் முறையாக விஜய் பேசியதாவது:-
மக்களே
மக்களுக்காக
மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆப்ரகாம் லிங்கன் கூற்றை முன் வைத்து தொடங்கினார்...
இங்கிலாந்தில் மன்னராட்சி இருந்த காலத்திலேயே நாடாளுமன்றம் செயல்பட்டது. ஜனநாயகத்தின் இதயமாக இந்த பேரவை செயல்பட வேண்டும்.மக்களே மக்களுக்காக நடத்தும் ஆட்சி மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
தவெக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும்.
சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடக்க வேண்டும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் அவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பேரவையில் அனைவரும் சமம். சட்டமன்ற மரபுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார்.