#JUST IN : எம்.எல்ஏக்களுக்கு தனி வாகனம், பராமரிப்பு செலவை அரசு வழங்கும் - முதல்வர் அறிவிப்பு..!
சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட முதல்வர் விஜய், கோரியிருந்த நிலையில், தந்போது அவர் சிறப்பு அறிவிப்புகள் தொடர்பான அறிக்கையை வாசித்து வருகிறார்.
பெரம்பூரில் ரூ300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கை வசதிகள் கொண்ட பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ25 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பயண தேவைக்களுக்காக பிறரை சார்ந்து இருப்பதை தவிர்க்கவும், தங்கள் தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பயண தேவைக்களுக்காக பிறரை சார்ந்து இருப்பதை தவிர்க்கவும், தங்கள் தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் கார் ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ75000 வழங்கப்படும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு ரூ25000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.