#JUST IN : வெற்றிப்பயணம் திட்டத்தை உற்சாகமாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!
த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.
இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் கிடையாது. அதோடு, வெற்றிப் பயணத் திட்டம், இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
இத்திட்டத்தின் கீழ் திருநரும் (திருநங்கைகள்) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அரசு கணித்துள்ளது.
தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். ஆனால் வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண அரசு பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,695 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.
அதாவது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்தமுள்ள 18,413 பேருந்துகளில், 12,695 பேருந்துகள் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். அதுபோல், மொத்தமுள்ள நடைகளில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.
.இந்த நிலையில் இருக்கை தோறும் சென்று மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து டிக்கெட் கொடுத்து வெற்றிப்பயணம் திட்டத்தை உற்சாகமாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..
மகளிர் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் வெற்றிப்பயண திட்டத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
நகரம் மட்டுமில்லாமல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை
இருக்கை தோறும் சென்று மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து டிக்கெட் கொடுத்து வெற்றிப்பயணம் திட்டத்தை உற்சாகமாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..#Chennai | #CMJosephVijay | #VetriPayanamThittam | #TNGovt | #GirlsFreeBus | #PolimerNews pic.twitter.com/FwYe3sLWrz
— Polimer News (@polimernews) October 2, 2026
இருக்கை தோறும் சென்று மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து டிக்கெட் கொடுத்து வெற்றிப்பயணம் திட்டத்தை உற்சாகமாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..#Chennai | #CMJosephVijay | #VetriPayanamThittam | #TNGovt | #GirlsFreeBus | #PolimerNews pic.twitter.com/FwYe3sLWrz
— Polimer News (@polimernews) October 2, 2026