☰
×

#JUST IN : பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்..!

 

கோவை காந்திபுரத்தில் 7 மாடிகளில், சுமார் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். 

‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர், அவினாசி சாலை வழியாக சுமார் சுமார் 11.4 கி.மீ தூரம் விழா நடைபெறும் காந்திபுரம் பகுதிக்கு ரோடு ஷோ செல்கிறார். வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

 

இதனைத் தொடர்ந்து, விழா இடத்தை அடையும் முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலக முகப்பு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையையும், திறப்பு விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். வானோங்கி நிற்கும் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.

  <a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/cvU9Vz08Obc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/cvU9Vz08Obc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">