×

#JUST IN : திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் முதலமைச்சர் பேசினார் - கே.என்.நேரு..!

 

திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் முதலமைச்சர் பேசினார் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, சர்க்காரியா கமிஷன், மிசா குறித்து உண்மைக்கு மாறாக முதலமைச்சர் பேசினார். அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரினோம். நீக்கமறுத்து தற்போது வெளியேற்றி இருக்கிறார்கள் என சாடினார்.

“தொடர்ந்து தவறான தகவல்களை அவையில் முதலமைச்சர் கூறி வருகிறார்; அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும்போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்”

ஏற்கனவே இருந்த வழக்குகளைப் பற்றியெல்லாம் சொல்கிறார்; மிசாவைப் பற்றியும், ED யைப் பற்றியும் பேசுகின்றார்; ஆனால் அதற்குப் பதிலளிக்கப் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இன்றைக்கு விளக்கம் கேட்டோம்; மாண்புமிகு முதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், தவறான செய்திகளைச் சொல்லியுள்ளார் என்று சொன்னபோது, பேரவைத் தலைவர் மறுத்த காரணத்தால் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்றார்.