#JUST IN : "ஒரு வார காலம் சிக்கன் கிடைக்காது" - கோழி வணிகர்கள் முடிவு..!
Jul 11, 2026, 18:06 IST
கோழி இறைச்சி விற்பனையை ஒரு வாரத்திற்கு நிறுத்த கோழி வணிகர்கள் முடிவு செய்ய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோழி இறைச்சி விற்பனையை ஒரு வாரத்திற்கு நிறுத்த கோழி வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கறிக்கோழிகளை விற்பனைக்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்க வேண்டும் என்ற நடைமுறையை வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘விற்பனை நிறுத்தப்படும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவித்துள்ளனர்.
"ஒரு வார காலம் சிக்கன் கிடைக்காது" - கோழி வணிகர்கள் முடிவு#Chicken #Poultry #ChickenMeat #PoultryFarmers #ChickenSales#News18TamilNadu #TamilNews pic.twitter.com/2FDQNuCFpr
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 11, 2026