#JUST IN : சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் 3 நாட்களுக்கு மூடல்..!!
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நீர்வாழ் பறவைகள் சில உயிரிழந்துள்ளன. பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இறந்த பறவைகளின் மாதிரிகள், பரிசோதனைக்காக போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பறவைகள் இருப்பிடம் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மற்ற பறவைகள், விலங்கினங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாள்களுக்கு அதாவது நவ. 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் 27.11.2026 அன்று சில பறவைகள் உயிரிழந்துள்ளன. பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட உள்ளன.
பறவைக் காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா 28.11.2026 முதல் 30.11.2026 வரை மூன்று நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு மூடப்படும்.
இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாகக் முன்னெச்சரிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.