#JUST IN : சென்னையில் விபத்தில் சிக்கிய மாநகர பேருந்துகள்.. 5 பேர் காயம்..!!
Jul 4, 2026, 10:59 IST
சென்னை போர் நினைவிடம் (War Memorial) அருகே மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த (MTC) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.தீவுத் திடலில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 21G எண் கொண்ட குளிர்சாதன (AC) அரசுப் பேருந்து மீது, 102P எண் கொண்ட மற்றொரு மாநகரப் பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த பூக்கடை (Flower Bazaar) காவல் நிலைய போலீசார், விபத்தை ஏற்படுத்திய 102P பேருந்தின் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக 102பி பேருந்தின் ஓட்டுநரிடம் பூக்கடை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.