#JUST IN : தூய்மைப் பணியாளர்களுக்கு கோடை முழுவதும் மோர் வழங்கப்படும் : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு..!
Updated: Feb 18, 2026, 12:47 IST
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது மேயர் பிரியா காலை 11 மணியளவில் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: -
* கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும்.
* சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை
* வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடி செலவில் தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும்
* ரூ.10 கோடியில் சென்னை பசுமை திட்டம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.