#JUST IN : பாஜக கவுன்சிலராக வெற்றி பெற்றவருக்கு 36 ஆண்டுகள் சிறை..!
Dec 19, 2025, 11:37 IST
கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலசேரி நகராட்சியில் கவுன்சிலராக வெற்றி பெற்ற பாஜகவின் பிரசாந்த், குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது
கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் தலசேரி நகராட்சியில் கவுன்சிலராக பெற்றி பெற்ற பிரசாந்த்துக்கு குற்ற வழக்கில் 36 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கில் பிரசாந்த் உள்ளிட்ட 9 பேருக்கு 7 பிரிவுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே பிரசாந்த் தனது பதவியை தக்க வைக்க முடியும்.