×

#JUST IN : அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு..!

 

மேகதாது விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் 
எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், மேகதாது பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். முறைப்படி கடிதம் கொடுத்தும் மேகதாது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என கூறினார் 

சட்டமன்றத்தில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக அமைச்சர் பர்வேஸ் விளக்கமளித்த நிலையில் அமைச்சரின் விளக்கத்திற்கு முன் தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி தி.மு.க, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்  அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழக்கமிட்டார்.  இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வெளிநடப்பு செய்யாமல் இருந்தனர்.


<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/1686xOvRaMA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1686xOvRaMA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">