#JUST IN : இபிஎஸ் இல்லத்திற்கு புதுச்சேரியிலிருந்து படையெடுத்த அதிமுக MLA-க்கள்..!
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனைஅதிமுக MLA-க்கள் சென்னை வந்தவுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டு வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகி தம்பிதுரை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தான் அடுத்த முதல்வர் என்ற கருத்தை சொல்லி இருந்தார். இந்த நிலையில் எந்த கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அதிமுக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பசுமைவழி சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு புதுச்சேரியிலிருந்து படையெடுத்த அதிமுக MLA-க்கள்.