#JUST IN : நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்!
Dec 13, 2025, 17:47 IST
2019ம் ஆண்டு வெளியான 'சோழா' (Chola) படத்திற்கு கேரள அரசின் திரைப்பட விருது பெற்றவர் நடிகர் அகில் விஸ்வநாத்(30). இவர் 'ஓப்பரேஷன் ஜாவா' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மாங்காண்டி படத்தில் நடித்ததற்காக அகில், அவரது சகோதரர் அருணுடன் சேர்ந்து கேரள மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றார்.
இன்று (டிச.13) அவருடைய வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அகில் மரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.