×

#JUST IN : "குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்!" – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி பதிலுரை!

 

இன்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீதான பதிலுரையை நிகழ்த்தவுள்ளார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றி வரும் முதலமைச்சர் விஜய், “ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் வளர்ச்சியோ, தொழிற்சாலைகள் வளர்ச்சியோ மட்டுமல்ல. அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில்தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தொழில் முன்னேற்றங்கள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். காவல்துறை என்பது வெறும் குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமாக விளங்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும்” என்றார்.

மேலும், “சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும் பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் எந்தவித அச்சமும் இன்றி நேர்மையாக தங்களது பணிகளை செய்ய வேண்டும். இதற்கான சூழல்களை உருவாக்க இந்த அரசு வியந்த முன்னுரிமை வழங்குகிறது.

முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் காவல் துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடு இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் கண்ணோட்டமாகும்” எனத் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை! | CM Vijay | TN Assembly | DMK | TVK | IBC Tamil#tvk #tnassembly #vijay #ibctamil #dmk pic.twitter.com/lk6aMmsCZf

— IBC Tamil (@ibctamilmedia) September 7, 2026