#JUST IN : "பரபரப்பான ரோடு ஷோ.. திடீர் விபத்து!" - உடனடியாக வேனை நிறுத்த சொல்லி கீழே இறங்கிய விஜய்..!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கிய நிலையில், முதல்நாளே முதல்வர் வேட்பாளர்களான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், சீமான் காரைக்குடி தொகுதியிலும், விஜய் பெரம்பூர் தொகுதியிலும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும், த.வெ.க தலைவர் விஜய் தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுள்ளார். 11 மணியளவில் வேட்புமனுவை தாக்கல் செய்யும் விஜய், அதன்பிறகு திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், பிரச்சாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தை த.வெ.க தொண்டர்கள் தொடர்ந்து விரட்டி வரும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை விஜய் ரோடு ஷோ நடத்திய விஜய், தொண்டர்கள் வீசி எரித்த கட்சி துண்டுகளை வாங்கி தனது தோளில் அணிந்தபடி கையைசைத்தும் வாகனத்தில் நின்றபடி வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பரப்புரை வாகனத்தில் ரோடு ஷோவாக விஜய் சென்றுகொண்டிருந்த போது, அவரை பார்ப்பதற்காக முன்னால் சென்ற ஸ்கூட்டியிலிருந்து ஒரு பெண் உள்பட இருவர் தவறி கீழே விழுந்தனர். அத்துடன், பின்னால் வந்த போலீஸ் வாகனமும் ஸ்கூட்டியில் உரசியது. இதனால் பதறிய விஜய், உடனடியாக வேனில் இருந்து இறங்கி அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்.