×

#JUST IN : காலை 7.40 மணி வரலாற்று தருணம்! 12 கோபுரங்கள் மீது புனித நீர்... 'சிவ சிவ' கோஷத்துடன் கோலாகலமாக நடந்த மகா கும்பாபிஷேகம்!

 

 

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு (17 ஆண்டுகளுக்கு பின்), மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் என்பதால், இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

லட்சக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான அடிப்படை வசதிகள், அசம்பாவித தடுப்பு என இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தன.

17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்க ளுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன.

 

கங்கை, யமுனை, 1 காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசா லையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வந்தன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தினர். கடந்த 11-ந் தேதியன்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன. 

 

நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி. துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள் தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணியளவில் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டபோது அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் முருகி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்கின. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.

கும்பாபிஷேகத்தை கோவிலின் மேல் தளத்தில் இருந்து காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நான்கு மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்துள்ளனர். 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/lKUYmTxJZhg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/lKUYmTxJZhg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">