×

#JUST IN : தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு..!

 

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பாஜக-க்கு 27 தொகுதிகள், பாமக-க்கு 18 தொகுதிகள், அமமுக-க்கு 11 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.