#JUST IN : 3 தமிழர்கள் சுட்டுக்கொலை.. சிபிஐ விசாரணை கோரிய இபிஎஸ்..!!
Aug 18, 2026, 09:53 IST
கர்நாடகா வனத்துறையால் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானததின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு வழங்குவதாக அறிவித்த ரூ.5 லட்சம் இழப்பீடு நிதி போதாது. கூடுதல் தொகையை வழங்க வேண்டும். இனியும் இதுபோன்று நடக்காத வகையில் தமிழக அரசு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.