×

#JUST IN : அனுமதியின்றி மஞ்சு விரட்டு - காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி..!

 

சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி அருகே காணும்பொங்கலையொட்டி நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் காளை முட்டி 2 பேர் உயிரிழந்தனர். இந்த போட்டிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. வாடிவாசலில் திறந்துவிடப்பட்ட காலை சீறி பாய்ந்து வந்து முட்டியதில் ஆண் மற்றும் பெண் என இருவர் பலியாகியுள்ளனர். வயிற்று பகுதியில் குத்தப்பட்டு வினிதா என்ற பெண்ணும், மார்பு பகுதியில் குத்துபட்டு சக்திவேல் (22) என்ற இளைஞரும் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.