#JUST IN : +2 தேர்வு முடிவுகள் - 100க்கு 100 எத்தனை பேர்?
May 8, 2026, 10:07 IST
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. அதில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் வரும் 13ஆம் தேதி புதன் கிழமை அன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் எத்தனை பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளனர் தெரியுமா..??
100க்கு 100 எடுத்தவர்கள்
தமிழ் - 83
ஆங்கிலம்- 91
கணிதம் 732
இயற்பியல் 105
வேதியியல் 632
உயிரியல் 784
கணக்குப் பதிவியல் 1,946
வணிகவியல் 683
பொருளியல் 440
தாவரவியல் 31
விலங்கியல் 18
வரலாறு 282