ஆன்லைனில் பிரபலமாகும் ஜூஸ்- மன அழுத்தத்தை குறைக்குமா?
பொதுவாக இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகிக்கும் ஒரு சொல் ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தம் .இந்த மன அழுத்தத்தை எளிதில் குறைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது.
ஆனால் தற்போது ஆன்லைனில் பிரபலமாகும் பானத்தில் தேங்காய் நீர், எலுமிச்சை/ஆரஞ்சு சாறு, magnesium, சிறிது உப்பு சேர்க்கப்படுகிறது; stress குறைக்கவும், energy அதிகரிக்கவும், கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அளவை கட்டுப்படுத்தவும் உதவும் எனக் கூறப்படுகிறது. ஆனால் கார்டிசோல் அளவை குறைக்கவோ, anxiety, fatigue, insomnia w சிகிச்சை அளிக்கவோ இந்த பானம் உதவும் என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் அல்லது potassium-ஐ பாதிக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் தேங்காய் நீரை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை/ஆரஞ்சு சாறு சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மனு அழுத்தத்தை குறைக்கும் வழிகள்:
1.மன அழுத்தத்தை குறைக்க நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது,நலம் சேர்க்கும்
2. மன அழுத்தத்தை குறைக்க சரியான உடற்பயிற்சிகளை செய்வது உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க தொடங்கும்.
3.மன அழுத்தத்தை குறைக்க உங்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடிய கூடிய வேலைகளை சரியாக கண்டறிந்து அதில் போதிய கவனத்தை செலுத்தி பிரச்சனைகளை தீர்க்கலாம்
4.மன அழுத்தத்தை குறைக்க உங்களுடைய பரபரப்பான வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும்.
5.மன அழுத்தத்தை குறைக்க எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை அதிகரிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களோ அவைகளிலிருந்து விரைவில் வெளிவர முயற்சி செய்யுங்கள்.
6.எல்லா செயல்களுக்கும் ஒரு முடிவு இருக்கும். நீங்கள் இந்த சரியான முடிவை தேர்ந்தெடுத்து பிரச்சனைகளை சமாளித்தாலே போதும் மன அழுத்தத்தை குறைக்கலாம்
7.. மிக முக்கியமாக உங்களுடைய மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கு என்று உங்கள் அருகில் ஒரு சிலர் இருப்பார்கள்.
8.அவர்களை சரியாக கண்டறிந்து அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாலே போதும். பாதி மன அழுத்தம் குறைந்து நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்