×

தமிழக அரசு மற்றும் ஆளுநருக்கு நீதிபதிகள் பாராட்டு!

7.5% ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசையும் ஆளுநரையும் நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த, 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நெருங்குவதால், ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதன் படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
 

7.5% ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசையும் ஆளுநரையும் நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த, 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நெருங்குவதால், ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதன் படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த போது நடப்பாண்டில் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள் ஒதுக்கீடு தொடர்பான உடனடி நடவடிக்கை எடுத்த ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக, அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது நீதிமன்றத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.