×

ஜேபி நட்டா நாளை கிருஷ்ணகிரி வருகை

 

கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையிலும் திறந்து வைக்கிறார். 

தொடர்ந்து 75 அடி உயர கொடி கம்பத்தில் பாஜக கொடியை நட்டா ஏற்றி வைக்கிறார் என்றார். இதையடுத்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கக்கூடிய பாஜக அலுவலகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஜே.பி. நட்டா திறந்து வைக்கிறார். அதன்படி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் புதிய பாஜக அலுவலகம் திறக்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பாஜக தலைமையுடன் கட்சியில் நிலவும் சலசலப்புகள் குறித்து கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் கட்சியிலிருந்து விலகி 24 மணிநேரத்திற்குள் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகினார். அவரும் பாஜகவின் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.  அதன்பின் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகியதால் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளான பாஜக, அதிமுகவுக்கு எதிராகவும், அதிமுக, பாஜகவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது.