“இந்துகளுக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்”- நட்டா
தமிழகத்தில் ஊழலற்ற அதிமுக ஆட்சியை கொண்டு வரவேண்டும் என ஒன்றிய அமைச்சர் நட்டா வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் பாஜக தேர்தல் பொது கூட்டத்தில் தமிழகத்தில் ஊழலற்ற அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என ஒன்றிய சுகாதார அமைச்சர் நட்டா வலியுறுத்தி பேசினார். தளி சட்டபேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நாகேஷ்குமாரை ஆதரித்து தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொது கூட்டத்தில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் ஜேபி நட்டா கலந்து கொண்டு பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்க்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்
பொதுக்கூட்டத்தில் பேசிய நட்டா, “தமிழகத்தில் ஊழல் ஆட்சி திமுகவை தூக்கி ஏரிந்துவிட்டு ஊழலற்ற அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் திமுக என்று சொன்னால் குடும்ப ஆட்சி தமிழகத்தில் இளைஞர்களை போதையில் தள்ளாடி கொண்டுள்ளனர். இதனால் 51 சதவீதம் போதைக்கு அடிமையாகி உள்ளனர். மேலும் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. ஜனநாயகத்திற்கு பெயர் போன தமிழகம் தற்போது ஜனநாயகம் எங்கே என கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான திமுக ஆட்சி நடை பெறுகிறது. உதயநிதி சனாதர்மத்திற்கு எதிராக பேசுகிறார். அ. ராஜாவும் சனாதனத்தை குஷ்டம் என கூறினார். எனவே இந்துகளுக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.
திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கேஸ் ரூ.100 மானியம் வழங்கப்படும், பெட்ரோலுக்கு ரூ.50 குறைக்கப்படும் என கூறினர். அதே போல் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை எனக்கூறினர். ஆனால் சொன்னதையும் செய்யவில்லை சொல்லாதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மோசமான பொருளாதாரம் இருந்தது. ஆனால் தற்போது உலகத்திலியே 2-ம் நாடகா இந்தியா வளர்ந்துள்ளது. தற்போது இந்தியாவிலியே செல்போன் மற்றும் எலக்டரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு எந்த திட்டமும்செய்ய வில்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஒன்றிய அரசு ரூ 14 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை அமைத்துள்ளது. ரயிவே சாலை மற்றும் ராமேஸ்வரம் பாம்பன் மேம்பாலம் ,98 சதவீதம் மின்சார ரயில்கள் அமைத்து கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 9 வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வந்துள்ளார். 77 ரயில் நிலைம் புதுபிக்கப்பட்டுள்ளது. 2500 ஆயிரம் கோடியில் தொழிற்வளர்ச்சி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பி எம் மித்தரா ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, தூத்துக்குடி ,கோவை சென்னை, மதூரை ஆகிய விமான நிலையங்கள் விரிவாகம் செய்யதற்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லுகிறார். தளியில் உள்ள மற்றோரு வேட்பாளர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. எனவே உங்கள் வேட்பாளர் குற்றவாளியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு மருத்துவரை சட்டசபைக்கு அனுப்பிவர்களா என வினா எழுப்பினார்,எனவே பாஜக வேட்பாளர் டாக்டர் நாகேஷ்குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.