×

தவெக நிர்வாகிகளை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராட்டம்! சேலத்தில் பரபரப்பு

 

செய்தியாளரை அடிக்க முயன்ற த.வெ.க. நிர்வாகிகளை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில வெள்ளி பட்டறை தொழிலாளி சூரஜ் என்பவர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விஜயை பார்ப்பதற்காக  மைதானத்தில் நின்றிருந்ததால் வெயிலின் கொடுமை தாங்காமல் மயக்கம் அடைந்தார் பின்னர் உடனடியாக அவருக்கு மைதானத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக சூரஜ் உயிரிழந்தார். இதனை அறிந்த உறவினர்களும் நண்பர்களும் தனியார் மருத்துவமனையில் திரண்டு அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் அவரோடு நிர்வாகிகள் சிலர் தனியார் மருத்துவமனைக்கு வந்து சூரஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக வந்தனர். அப்போது செய்தியாளர்கள் சிலர் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக முண்டியடித்து சென்றனர். இதனால் பார்த்திபன் காரில் ஏறி சென்று விட்டார் அவரை தொடர்ந்து வந்த நிர்வாகிகள் சிலரை நிறுத்தி பேட்டி எடுக்க முயன்றனர். இதனால் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சேதுபதி மாரியப்பன் என்ற நிர்வாகி பேட்டியளிக்க முடியாது எனக்கூறி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷெரி என்பவரை தாக்கியதாக  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற செய்தியாளர்கள் வழக்கறிஞர் சேதுபதி மாரியப்பனின் ஜீப் காரினை வழிமறித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதுபதி மாரியப்பனை கீழே இறங்கி மன்னிப்பு கேட்பார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலைய்ல் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தபோது செய்தியாளர் ஒருவர்  திடீரென தமிழக வெற்றி கழகத்தை இன்று ரூபாய்க்கு ஒருவரை தாக்கினார்.  இதனால் அவருக்கு நேற்றியில்  பலத்த காயம் ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் திடீரென அந்த பகுதியில் திரண்டு பத்திரிகையாளர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாவைக்கா நிர்வாகியை தாக்கிய பத்திரிக்கையாளரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை எடுத்து வந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தினர் கூறியதின் பேரில் கலாட்டா சேனலை சேர்ந்த நல்லதம்பி என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சில நாயக்கன்பட்டி தனியார் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே காவிகா கூட்டத்தில் உயிரிழந்த சூரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஒருவரால் தாக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி இந்திரராஜ்  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.