×

சீமான் பாஜகவின் “B Team”… ஜோதிமணி பரபரப்பு வீடியோ

பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் ராகவன் பெண் ஒருவரிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவது போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பாவில்லை. இந்நிலையில் ஜோதிமணி எம்பி வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கும் சீமான், கொஞ்சக்கூட பொறுப்போ, கூச்சமோ இல்லாமல், தமிழ்நாடே பார்த்து அதிர்ச்சியடைந்த பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் வீடியோ, பாலியல் அத்துமீறலை, சுரண்டலை
 

பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் ராகவன் பெண் ஒருவரிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவது போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பாவில்லை.

இந்நிலையில் ஜோதிமணி எம்பி வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கும் சீமான், கொஞ்சக்கூட பொறுப்போ, கூச்சமோ இல்லாமல், தமிழ்நாடே பார்த்து அதிர்ச்சியடைந்த பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் வீடியோ, பாலியல் அத்துமீறலை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. வேறு யாரும் செய்யாததையா? ராகவன் செய்துவிட்டார் என கூச்சமில்லாமல் சீமான் கூறுகிறார். காலங்காலமாக குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது அதனால் அவை சரியென ஆகிவிடுமா? அல்லது கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எல்லாம் நிரபராதியாகிவிடுவார்களா? எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டிருக்கிறதோ, அதேபோல அதுக்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை சீமான் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த போராட்டத்தின் விளைவாகவே இன்று அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள், தங்கள் பங்களிப்பை வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பல்வேறு உளவியல், சமூக, பொருளாதார தடைகளை தாண்டியே பெண்கள் பொதுவாழ்வுக்கு வரவேண்டியுள்ளது. அப்படி, பல போராட்டங்களுக்கு மத்தியில் பொதுவெளிக்கு வரக்கூடிய பெண்கள், கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும். அப்படி இல்லாமல் பெண்களிடம் யாராவது முறைகேடாக, அத்துமீறி நடந்துகொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். தமிழ் சமூகம் ஒருபோதும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளாது. ஏன் சீமான் ராகவனை ஆதரிக்கிறார் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். சீமான் மீதும் கடந்த காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனை ஆதரிக்கிறார். அதுமட்டுமின்றி, இதன்மூலம் பாஜகவின் பி டீம் தான் என்பதை சீமான் நிரூபித்துள்ளார். சீமானின் செயல் வெட்கக்கேடானது. சீமான், கேடி.ராகவன் போன்றோரின் வளர்ச்சி தமிழக பெண்களுக்கு ஆபத்தானது. இளைஞர்கள், மாணவர்கள் சீமானின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு புறக்கணிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.