“தெரிந்தேதான் ஊழல் செய்கின்றனர்”- அரசை சாடிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேச மகளிருக்கான வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், “N.R.அரசில் ஊழல் தெரிந்தே தான் செய்கின்றனர். புதுச்சேரியில் மக்கள் மிகுந்த கஷ்டமான சூழலில் இருக்கின்றனர். மாநிலம் என்றால் வளர்ச்சி இருக்க வேண்டும். மக்கள் இன்னும் பின் தங்கி உள்ளனர். பலரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். விஜய்யின் ஆதரவு இருந்தால் நல்லா இருக்கும். த.வெ.கவுடன் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்துள்ளோம். அவர்கள் அழைப்புக்காக காத்திருக்கிறோம். விஜயிடம் நேரடியாக பேச முடியவில்லை. மத்திய அரசின் நிதி திரும்பி செல்கிறது.
பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு ஆளும் அரசு தான் பொறுப்பு. எனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால், மகளிர் மட்டுமன்றி, இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பாஜகவில் உரிய அங்கீகாரம் இல்லாததால் தான் தனிக்கட்சி தொடங்கினேன். தவெக விரும்பினால் கூட்டணி அமையும், ஆனால் விஜய் உடன் இருப்பவர்கள் அவரை குழப்பத்திலேயே வைத்துள்ளனர்.” என்றார்.