×

குவைத்தில் சிக்கிய பெண்ணை 12 மணி நேரத்தில் மீட்ட ஜோஸ் சார்லஸ்!

 

குவைத்தில் சிக்கியிருந்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜாவின் மனைவி சத்தியவாணி என்பவரை தனது துரித நடவடிக்கை மூலம் 12 மணி நேரத்தில் மீட்ட LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன், புதுச்சேரியில் இலட்சிய ஜனநாயக கட்சி (LJK) என்ற புதிய கட்சியை டிசம்பர் 2025-ல் தொடங்கினார். இவர் தனது 'JCM மக்கள் மன்றம்' மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவர் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவதே இலக்கு எனக் கூறியுள்ளார். 


இந்நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆட்டோ ஓட்டுநர் ராஜாவின் மனைவி சத்தியவாணி வேலைக்காக குவைத் சென்று அங்கு வீட்டுச் சிறையில் சிக்கினார். இதை அறிந்த லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், 12 மணி நேரத்தில் அப்பெண்ணை மீட்டுள்ளனர். சொந்த ஊர் வந்த சத்தியவாணி, LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு கண்ணீர் மல்க நேரில் நன்றி தெரிவித்தார். மகன் உயிருக்குப் போராடுகிறான் என்ற செய்தி கேட்டும், வரமுடியாமல் குவைத்தில் தவித்த என்னை தகவல் அறிந்த அடுத்த நொடியே, அந்தத் தாயை பத்திரமாக மீட்டுத் தன் குடும்பத்துடன் சேர்த்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின், அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என சத்தியவாணி கூறியுள்ளார்.