×

ரூ.328 கோடியா? ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு

 

ஜோஸ் சார்லஸிடம் ரூ. 25.67 கோடி மதிப்பிலான 17 ஆயிரத்து 525 கிராம் தங்கமும், ரூ. 44. 87 கோடி மதிப்பிலான 1950.353 கேரட் வைரங்களும், ரூ. 3.77 கோடியிலான 134.98 கிலோ வெள்ளியும், ரூ. 38. 53 கோடி வாட்சுகளும், ரூ.1.57 லட்சம் முத்துகளும் உள்ளன. அசையும் சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் ரூ. 328 கோடியும், மனைவியிடம் ரூ. 10.61 கோடி அளவிலும் உள்ளன.‌ அதேபோல் அசையா சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் சொந்தமாக வாங்கியது ரூ. 102 கோடி அளவிலும், பரம்பரையாக வந்தது ரூ. 167 கோடியும் உள்ளன. மேற்கு வங்கத்தில் லாட்டரி சீட்டுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் 3 நிலுவையில் உள்ளன.  

ஜோஸ் சார்லஸ் மார்டின் கையிருப்பாக ரூ. 20.59 லட்சமும், அவரது மனைவிசிந்து ஸ்ரீசார்லஸிடம்  ரூ. 1.82 லட்சமும் உள்ளது. கார்களில் ரூ. 66.15 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரும், ரூ. 1.29 கோடியிலான டொயோட்டோ வெல்பயர் கார்ஆகியவை உள்ளன. ஜோஸ் சார்லஸிடம் ரூ. 25.67 கோடி மதிப்பிலான 17 ஆயிரத்து 525 கிராம் தங்கமும், ரூ. 44. 87 கோடி மதிப்பிலான 1950.353 கேரட் வைரங்களும், ரூ. 3.77 கோடியிலான 134.98 கிலோ வெள்ளியும், ரூ. 38. 53 கோடி வாட்சுகளும்,  ரூ.1.57 லட்சம் முத்துகளும் உள்ளன. மேலும் டிடிஎஸ் உரிமைக்கோரலில் ரூ. 1.95 கோடி வந்துள்ளன. அவரது மனைவியிடம் ரூ. 5.35 கோடி மதிப்பிலான 3655 கிராம் தங்கமும் , ரூ. 2.10 கோடி மதிப்பிலான 485.5 கேரட் வைரங்களும்,  ரூ. 1.68 கோடி மதிப்பிலான 60 கிலோ வெள்ளியும், ரூ. 1.14 கோடி வாட்சுகளும் உள்ளன.  

ஜோஸ் சார்லஸிடம் விவசாயம் அல்லாத நிலம் ரூ. 192 கோடி மதிப்பில் உள்ளது. அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சம் மதிப்பிலும் உள்ளன. குடியிருப்பு கட்டடங்கள் ரூ. 269 கோடி மதிப்பில் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ. 60 லட்சம் மதிப்பில் உள்ளன. சொத்தில் ரூ. 19.45 கோடி கடனும், கார்  லோன் ரூ. 1.28 கோடியும், கிரெடிட் கார்டு லோன் உள்ளூர் வங்கியில் ரூ. 5.91 லட்சமும், வெளிநாட்டு வங்கியில் ரூ. 1.03 கோடியும் உள்ளன. கடந்த நிதியாண்டில் ஜோஸ் சார்லஸுக்கு ரூ. 59.37 கோடி வருவாயும், அவரது மனைவிக்கு ரூ. 16.63 லட்சம் வருவாயும் வந்தது.
அசையும் சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் ரூ. 328 கோடியும், மனைவியிடம் ரூ. 10.61 கோடி அளவிலும் உள்ளன.‌ அதேபோல் அசையா சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் சொந்தமாக வாங்கியது ரூ. 102 கோடி அளவிலும், பரம்பரையாக வந்தது ரூ. 167 கோடியும் உள்ளன. அவரது மனைவியிடம் 60  லட்சம் அளவிலும் உள்ளன.  கடன்கள் மொத்தமாக ரூ. 210 கோடி அளவில் உள்ளன. பல்வேறு வங்கி டெபாசிட்டுகளில் ரூ. 200 கோடி அளவில் உள்ளன. அவரது மனைவி பெயரில்ரூ. 3.43 லட்சம் டெபாசிட்டுகள் உள்ளன. ஜோஸ் சார்லஸ் ஷேர்களில் ரூ. 14.28 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி ரூ. 3.6 லட்சம் மதிப்பு ஷேர்களில் முதலீடு செய்துள்ளார். ஜோஸ் சார்லஸ் அட்வான்ஸ் வாங்கிய வகையில் ரூ. 195 கோடி அளவுக்கும் அவரது மனைவிக்கு ரூ. 24.2 லட்சமாகவும் தொகையுள்ளது.


வழக்குகள்

1. சட்ட விரோத நிதிகளை பிணையற்ற கடன்கள் எனக்காட்டும் பேலன்ஸ் ஷீட்டில் கையெழுத்திட்டு குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட வருவாயை சொத்துகளை வாங்கியதாக அமலாக்க இயக்குநரகத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். என்ஐஏ எர்ணாக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
2. பணமோசடி சட்டவிரோதப் பணத்தை ஈட்டுதல், அப்பணத்தை அசையா சொத்துகளில் முதலீடு செய்தல் தொடர்பாக வழக்கு டெல்லி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையீடப்பட்டுள்ளது.
3. மேற்கு வங்கத்தில்  லாட்டரி சீட்டுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் 3 நிலுவையில் உள்ளன.