ஆதவ், லீமா ரோஸ், ஜோஸ் சார்லஸ்! ஒரே குடும்பத்தில் 3 பணக்கார எம்எல்ஏக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் வெவ்வேறு கட்சி வேட்பாளர்களாக களம் கண்டபோதிலும் மூன்று பேரும் வெற்றி கண்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமாரோஸ் அதிமுக சார்பில் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணக்கார வேட்பாளராக அறியப்பட்ட இவர், லால்குடி தொகுதியில் களமிறக்கப்பட்டார். லீமாரோஸின் மகனான ஜோஸ் சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் மூன்று பேரும் அபாரமாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 10,205 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜூனா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். லால்குடி தொகுதியில் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை லீமா ரோஸ் வீழ்த்தியுள்ளார்.
.