×

“ஜெம் வீரமணியிடன் ரூ.20 கோடி வாங்கி தர சொன்னார்கள்”- ஜான் பாண்டியன்

 

ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படும் புகாருக்கு ஜான் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜான் பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், “ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. சாந்தி யார் என்றே எனக்கு தெரியாது, காங்கிரஸ் SC பிாிவு மாநிலத்தலைவா் ரஞ்சன்குமார் உடன் மட்டுமே பழக்கம். ஒரு அரசியல் தலைவர் சொல்லிதான் ரஞ்சன் என்னை பார்க்க வந்தார். வீரமணியின் வீடு எங்கு இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது. வீரமணியை மிரட்டி பணம் வாங்கி தருமாறு ரஞ்சன்குமார் என்னை அணுகினார்.  20 கோடி ரூபாய் வாங்கு தருமாறு ரஞ்சன் குமாரும், சாந்தியும் கூறினர். ரஞ்சன்குமார் அழைத்து வரும் வரை எனக்கு சாந்தியை தெரியாது. வீரமணியை மிரட்டி பணம் பறிக்கத்தான் சாந்தி திட்டமிட்டு வீடியோ எடுத்துள்ளாா். இப்படியொரு அசிங்கமான விசயத்தில் தலையிட மறுத்துவிட்டு நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டேன். காவல்துறை விசாரித்தால் பதில் கூற நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.