×

“அதிமுகவில் இருந்து தவெக செல்வோர் அனைவரும் கொள்ளைக்காரர்கள்”- NDA கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்

 

 

NDA கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். மக்கள் தீர்ப்பே... மகேசன் தீர்ப்பு. நல்லாட்சி தர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தவெகவுக்கு போகவில்லை. அதிமுகவில் இருந்து தவெக செல்வோர் அனைவரும் கொள்ளைக்காரர்கள், அவர்களை சேர்த்தால் அழிவுதான் ஏற்படும். ஒரு சொம்பு பாலில் துளி விஷம் கலந்தாலும் அவ்வளவுதான் என்பதை முதல்வர் உணர வேண்டும். கடந்த தேர்தலில் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, நாங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போல இருந்தது தவறுதான். எங்களுக்கு சீட்டு கொடுக்காத பலனை அவர்கள் அனுபவித்து விட்டார்கள் எனத் தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டி முடிவெடுக்குப்படும். அடுத்து யாருடன் கூட்டணி என்பதை பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம்.  கூட்டணியில் நிரந்தரம் என்று கிடையாது” என்றார்.