×

ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன் அனுப்பிய ஜியோ ஹாட்ஸ்டார்!

 

ஹார்ட் பீட் சீரிஸின் 3வது பாகத்தில் தேஜு வேடத்தில் நடித்த யோகலட்சுமி அந்த சீரிஸில் தொடரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த ஏமாற்றத்தையே தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தங்களது மார்க்கெட்டிங் யுக்தியாக மாற்றி உள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், ஜியோ ஹாட்ஸ்டார் ரசிகர்களை இவ்வளவு நாள் காத்திருக்க வைத்த குற்றசாட்டின் பேரில் யோக லட்சுமி ஆஜராக வேண்டும் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருக்கிறது. முதலில் இதை பார்த்தவர்களுக்கு உண்மையான நோட்டீஸ் போலவே தெரிந்தாலும் பிறகு இது புதிய அறிவிப்புக்காக உருவாக்கப்பட்ட வித்தியாசமான பிரமோஷன் என்பது தெரிய வந்துள்ளது. ரசிகர்களை காத்திருக்க வைத்த குற்றவாளி என்று யோகலட்சுமிக்கு சம்மன் அனுப்புவது போல வடிவமைக்கப்பட்ட இந்த ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் யோகலட்சுமியை மையமாக வைத்து வெளியான இந்த சம்மன் ப்ரோமோ ரசிகர்களிடம் மேலும் ஆர்வத்தை தூண்டி உள்ளது. மீண்டும் தேஜு வரப்போகிறாரா? அப்போ அவருடைய கேரக்டர் இனி எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகிறார்கள்