நகைப்பிரியர்கள் ஷாக்..!!நேற்றும் உயர்வு... இன்றும் உயர்வு... 2 நாட்களில் 2000 உயர்ந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை கடந்த 2 வாரங்களில் கணிசமாக சரிந்து, இந்த ஆண்டிலேயே குறைந்தபட்சமாக ரூ. 91 ஆயிரத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவுக்கு அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம், டாலர் மதிப்பு அதிகரிப்பு, பங்குச்சந்தை வலுப்பெற்றது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தால் தங்கம் விலை இன்னும் சரிய வாய்ப்பிருக்கிறது. எனினும், ஒரு சவரன் விலை ரூ. 90 ஆயிரத்துக்கும் கீழே செல்வது கேள்விக்குறி தான் என்கின்றனர் நிபுணர்கள்.
நேற்று (நவம்பர் 23) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.175-க்கு விற்பனையானது.
இன்று (நவம்பர் 24) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.115 உயர்ந்து ரூ.11,715-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.920 உயர்ந்து, ரூ.92,720-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.