×

நகை வாங்குவோர் ஷாக்..! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!!

 

தங்கம் விலை இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி 57,200 ஆக இருந்த தங்கம் விலை, ஜெட் வேகத்தில் உயர்ந்து வரலாற்றில் இல்லாத உச்சங்களை தொட்டது.

தங்கம் விலைக்கு போட்டியாக வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று வெள்ளி ஒரே நாளில் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.11 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. 

தங்கம் விலை நேற்று முன்தினம் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்றது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலை உயர்ந்த போதே தங்க வியாபாரிகள் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்று சொன்னார்கள். அது நேற்று முன்தினம் நிஜமாகிப் போனது.

இன்று (டிச. 18) தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில், 22K தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,440க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.99,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.224க்கும், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.2.24 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.