நகை வாங்குவோர் ஷாக்..! காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம்..!
Jun 30, 2026, 14:46 IST
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.2,160-ம், கிராமுக்கு ரூ.270-ம் அதிரடியாக குறைந்தது. ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும், ஒரு கிராம் ரூ.13,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில் பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.245 -க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.