×

நகை வாங்குவோர் ஷாக்..!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!!

 

தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் எது என்ற குழப்பம் வாடிக்கையாளர்களிடையே நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு நிபுணர்களின் கணிப்பில் வரும் நாட்களில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்திக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி, ஆண்டு முடிவில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டியது. இந்த விலையேற்றம் நீடிக்கும் என்றும், இந்த ஆண்டு பாதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 2 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், கடந்த பிப்ரவரி இறுதியில் ஏற்பட்ட அமெரிக்க - ஈரான் போரானது இந்த கணிப்பை மாற்றியமைத்தது. பொதுவாக போர் காலங்களில் தங்கம் விலை கடும் உயர்வை சந்திக்கும். இந்த போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வானது தங்கம் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பிறகு, தங்கம் விலையில் இன்று வரை ஏற்றம் காணாமல் தொடர்ந்து சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

தங்கத்தின் விலை இன்று (ஆக.3) ரூ.240 உயர்ந்துள்ளது.

நேற்று (ஆக.2) ஒரு சவரன் ரூ.105,760-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,220-க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது