நகை வாங்குவோர் ஷாக்..!! குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!!
உலகிலேயே மதிப்புமிக்க பொருளாக திகழும் தங்கத்தை தனிநபர்கள் மட்டுமல்லாது, ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வாங்கிக் குவிக்கின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாள்தோறும் கடுமையாக அதிகரித்து புதிய விலை உச்சங்களை சந்தித்து வந்தது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 90,480 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 96,560 ரூபாயாக விற்பனையானது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,080 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது
கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.